அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை என்பது ஒரு முக்கிய உத்தி என்பதால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதை நிராகரிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.