கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை… எம்.பி.க்களுக்கு மத்திய அரசு செம செக்!

மத்திய அரசின்
கேந்திரிய வித்யாலயா
(கே.வி.) பள்ளிகளுக்கு நாடு முழுவதும் எப்போதும் தனி மவுசு உண்டு். இங்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கல்வி பயின்றுவிக்கப்படுவதால் ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில சேர்வதற்கான நுழைவு தேரவுகளில் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறுவதே கே.வி. பள்ளிகளுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்ட பிறகு,
கே.வி. பள்ளிகள்
மீதான பெற்றோரின் ஈர்ப்பு மேலும அதிகரித்துள்ளது. இப்பள்ளிகளில் கல்விக் கட்டணமும், தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதால், தங்களது பிள்ளைகளுக்கான பெற்றோரின் முதல் சாய்ஸாக கே.வி. பள்ளிகள் திகழ்ந்து வருகின்றன.

ஆனால் இந்த பள்ளிகளில் ராணுவத்தினர், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகளுக்குதான் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பிக்கள்) தலா 10 இடங்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், தங்கள் தொகுதி எம்பியிடம் அதற்கான பரிந்துரை கடிதத்தை பெற்று, அதனை குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தால் போதும். இந்த பரிந்துரை கடிதத்தை அளிப்பதற்கே பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதனையடுத்து, எம்பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில்
மாணவர் சேர்க்கை
நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்

2022-23 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், இப்படியொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.