சீனாவினை கடந்த சில வாரங்களாகவே பதம் பார்த்து வரும் கொரோனா, டிராகன் தேசத்தினை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.
சீனாவின் பல முக்கிய நகரங்களில் போடப்பட்டுள்ள லாக்டவுன் நடவடிக்கை காரணமாக, பல லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதற்கிடையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள், சரியான உணவு, போதிய வசதிகள் செய்யப்படாததால் போராட தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கல் வெளியாகியுள்ளது.
பெரும் ஏற்றத்திற்கு பிறகு ஆறுதல் தந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?
திணறி வரும் சீனா
ஏற்கனவே கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சீனா, மறுபுறம் இதுபோன்ற சம்பவங்களையும் கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது உற்பத்தியினையும் தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. இது சீனாவுக்கு மேற்கோண்டு பலத்த அடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு ஆலைகள் மூடல்
ஷாங்காயில் உள்ள ஆப்பிளின் ஐபோன் உற்பத்தியாளர் சீனாவில் போடப்பட்டுள்ள கடுமையான லாக்டவுன் காரணமாக உற்பத்தியினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான பெகட்ரான், அதன் இரண்டு ஆலைகளை மூடுவதாகவும் அறிவித்துள்ளது. இது ஷாங்காயில் சில நடவடிக்கைகளை தளர்த்தியுள்ள போதும் வந்துள்ளது.
அரசுக்கு ஒத்துழைப்பு
சீனாவின் முக்கிய உற்பத்தி நகரமும், நிதி மையமான ஷாங்காய் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் அங்கு, கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ஷாங்காய் மற்றும் குன்ஷனில் இருக்கும் இரண்டு ஆலைகளை தற்காலிகமாக மூடுவதாக பெகட்ரான் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அரசின் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் விதமாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் விரைவில் ஆலை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டாவும் கம்பால் இடை நிறுத்தம்
இதற்கிடையில் மிகப்பெரிய ஆப்பிள் மேக்புக் உற்பத்தியானரான குவாண்டாவும், ஐபாட் தயாரிப்பாளரான கம்பால் எல்க்ட்ரானிக்ஸ் ஆகியவையும் சீனாவில் தங்களது உற்பத்திகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் பெகட்ரான், குவாண்டா, கம்பால் உள்ளிட்ட நிறுவனங்கள் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
பாதிப்பு
இந்த உற்பத்தி நிறுத்தத்தினால் இந்த மாதத்தில் இதுவரை 3 மில்லியன் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனியும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் உற்பத்தியானது இன்னும் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாக்ஸ்கான்
தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான், ஐபோன் அசெம்பிள் செய்யும் மற்றும் நிறுவனமாகும். இது ஷென்செனில் உள்ள தனது தொழில்சாலையில் கடந்த மாதம் வரையில் உற்பத்தியினை நிறுத்தியிருந்தது. இது பிற உற்பத்தி தளங்களுக்கு தனது உற்பத்தியினை மாற்றியது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் உலகிற்கு கொரோனாவினை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் சீனாவில், தற்போது மீண்டும் சரியான செக் வைத்துள்ளது இந்த கொரோனா.
iPhone maker halts operations at china amid corona lock down
iPhone maker halts operations at china amid corona lock down/சீனாவுக்கு சரியான செக் வைத்த கொரோனா.. ஐபோன் உற்பத்தியாளர் எடுத்த அதிரடி முடிவு..!