சசிகுமாரின் காரி பட பாடல்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

தனது முதல் படமான, சுப்ரமணியபுரம் திரைப்படத்திலேயே இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக  அசத்தியவர், எம். சசிகுமார். தொடர்ந்து  நாயகனாக, பல படங்களில் நடித்துள்ள சசிகுமாரின்,  பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.
இதற்கிடையே, சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்   சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் அடுத்ததாக அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில்  உருவாகும்  திரைப்படம் காரி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்தில்,  பார்வதி அருண், சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெட்டின் கிங்ஸ்லீ, நாகி நீடு, ராம்குமார் & சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இயக்குனர் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ள காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக காரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தற்போது காரி திரைப்படத்தின் முதல் பாடலாக கொப்பமவனே பாடல் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.