சமூக வலைதளங்களில் மின் பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்வோர், தங்களுடைய இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பராமரிப்புப் பணிகளால் மட்டுமே மின் வினியோகம் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.