சீனாவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்வது இதற்காக தானா..!

சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி வீரர்களாக மாற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் கீத் ரைடர், சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர்களாக மாற முயற்சி செய்து வருகின்றன.

அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..!

இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால், அடுத்த 30 ஆண்டுகளில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களை சுரண்டலாம் என்ற பகீர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கையின் படி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இணைந்தும் அல்லது தனித் தனியாகவும் விண்வெளி ஆராய்ச்சிகளை விரிபடுத்த முயல்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், நிலவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.

விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்

விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்

ரைடரின் இந்த கருத்துகள், விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள் 2022 என்ற அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அறிக்கைக்கு பின்னர் வந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு போட்டியாளாராக இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவும் இதில் மிகுந்த மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.

பிரச்சனை
 

பிரச்சனை

DIA-வின் உளவுத் துறை அதிகாரி ஜான் எஃப் ஹத் கருத்துப்படி, சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரானிய விண்வெளி திட்டங்கள், அமெரிக்கா அல்லது கூட்டாளார்கள் நலனுக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது எனவும் கூறியுள்ளார்.

ரஷ்யா, சீனாவின் நோக்கம் என்ன?

ரஷ்யா, சீனாவின் நோக்கம் என்ன?

மொத்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் எதிர்காலத்தில் உலகின் சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளனர். மாஸ்கோவும், பெய்ஜிங்கும் தங்களை முன்னணி ஆய்வாளர்களாக தங்களை நிலை நிறுத்த விரும்புகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவின் உலகளாவிய தலைமையை குறைமதிப்புக்கு உட்படுத்த விரும்புகிறார்கள்.

ரஷ்யா, சீனாவின் மாபெரும் வளர்ச்சி

ரஷ்யா, சீனாவின் மாபெரும் வளர்ச்சி

மேலும் 2019 – 2021-க்கு இடையேயான காலகட்டத்தில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து 70% விண்வெளி கப்பல்களையும், இதே தனித்தனியாக 2015 – 2018க்கு இடையில் 200% அதிகமாகவும் வளர்ச்சி கண்டுள்ளன. மொத்தத்தில் சீனாவும், ரஷ்யாவும் தங்களது திற்னை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. தொடர்ந்து அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. குறிப்பாக செயற்கை கோள், ரீமோட் சென்சிங் நேவிகேஷன் என பலவகையிலும் விரிவாக்கம் செய்து வருகின்றன என அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

விஞ்னானிகளின் கருத்து

விஞ்னானிகளின் கருத்து

அமெரிக்கா கூறுவது உண்மையாகும் பட்சத்தில் பல லட்சம் கோடி இயற்கை வளங்கள் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கு கிடைக்கலாம். எனினும் இதற்காக அதிகாரப்பூர்வ ஆதாரம் என்பது இல்லை எனலாம். எனினும் கடந்த ஆண்டு கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் கோள் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், நிலாவில் உறைந்த நிலையில் கார்பன் டை ஆக்சைடு படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Are China and Russia researching to exploit the natural resources of the Moon & Mars?

Are China and Russia researching to exploit the natural resources of the Moon & Mars?/சீனாவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்வது இதற்காக தானா..!

Story first published: Wednesday, April 13, 2022, 16:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.