புதுடெல்லி: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக இந்நிறுவனத்தின் அலுவலகங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதே போல் ஸியோமி தயாரிப்பிலான சில செல்போன்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு தடையும் விதித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஸியோமி நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல்கள் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸியோமியின் சர்வதேச துணை தலைவர் மனு குமார் ஜெயினை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.