சென்னையில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.