புதுடில்லி:ஜார்க்கண்ட் ‘ரோப்’ கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டோருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகூட் மலையில், ரோப் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் 60 சுற்றுலா பயணியர், 46 மணி நேரத்திற்கும் மேலாக ரோப் கார்களில் சிக்கி இருந்தனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ — திபெத் எல்லை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து, ரோப் கார்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டோருடன், பிரதமர் நரேந்நிர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று பேசினார். இது பற்றி பிரதமர் கூறுகையில், ”மிக திறமையாக செயல்பட்டு, மக்களை காப்பாற்றிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு என் நன்றிகள்,” என்றார்.
புதுடில்லி:ஜார்க்கண்ட் ‘ரோப்’ கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டோருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகூட் மலையில், ரோப் கார்கள் மோதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.