சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமியின் துணைத் தலைவரான இந்தியரை அந்நியச் செலாவணி முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஜியோமி நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி முறைகேட்டில் நிறுவனத்தின் துணைவரும், இந்தியப் பிரிவின் தலைவருமான மனு குமார் ஜெயின் தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.
இன்று பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பியும் மனு குமார் ஜெயின் ஆஜராகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.