புதுடில்லி:உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ்.இ.,’ பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ‘தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்த வேண்டும்’ என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டு உள்ளார். கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சர்மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நடைபெற்றது. அப்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிக்கவும், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர்வி.கே.பால், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன்,’எய்ம்ஸ்’ இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுடில்லி:உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ்.இ.,’ பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ‘தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்த வேண்டும்’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.