நாகர்கோவில், இரணியலை அடுத்த கண்ணாட்டு விலை பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ஒருவர், சில மாணவிகளிடம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்தை உயர்த்தி சொல்வதும், மற்ற மதங்கள் பற்றி இழிவாகவும் பேசியதாக மாணவிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி தங்கள் பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்தனர். மேலும், நேற்று மாலை, பள்ளி முன்பு தையல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்றனர். மேலும், காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை நடந்ததன் விளைவாக,
மேற்கொண்டு, மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட தையல் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.