சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளது. நீட் உள்ளிட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளதை கண்டித்து ஆளுநரின் தேநீர் விருந்தை விசிக புறக்கணித்துள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புறக்கணித்துள்ளது.