தள்ளுபடி விலையில் ரியல்மி புக் பிரைம் லேப்டாப் விற்பனை தொடக்கம்!

சீனாவின் ரியல்மி நிறுவனம், சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய லேப்டாப்பை இந்திய டெக் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான ரியல்மி புக் பிரைம் லேப்டாப்பின் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

இந்த மடிக்கணினியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தெளிவான காட்சியை வழங்க 2K டிஸ்ப்ளே, விண்டோஸ் 11 இயங்குதளம், Intel 11 Gen புராசஸர், புதிய கூலிங் சிஸ்டம், DTS Surround ஒலித்திறன், முழு மெட்டல் பாடி கட்டமைப்பு, சக்திவாய்ந்த பேட்டரி என அதிரடி அம்சங்களைக் கொண்டுள்ளது.

நல்ல லேப்டாப் வாங்க வேண்டும் என காத்திருக்கும் பயனர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம். விலையும் Mi Notebook Pro லேப்டாப்புக்கு இணையாகக் கொடுக்கப்பட்டுள்ளதால், இரு நிறுவன தயாரிப்புகளும் டெக் சந்தையில் நேரடியாக போட்டியிடுகிறது. இப்போது, ரியல்மி புதிய மடிக்கணினியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி புக் பிரைம் டிஸ்ப்ளே (Realme Book Prime Display)

புதிய ரியல்மி லேப்டாப்பில் 3:2 விகிதத்தில் இருக்கக்கூடிய 2K Ultra HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 400nits வரை பிரைட்னஸ் ஆதரவு உள்ளது. இதன் காரணமாக நீங்கள் வெட்ட வெளியில் இருந்து கூட லேப்டாப்பை பயன்படுத்த முடியும். sRGB Colour Gamut ஆதரவும் இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 2160X1440 பிக்சல்கள் உள்ளது.

ஆப்பிள் கணினியில் உள்ள அம்சத்தைக் கொண்டு வரும் மைக்ரோசாப்ட்!

ரியல்மி புக் பிரைம் வடிவமைப்பு (Realme Book Prime Design)

எம்ஐ நோட்புக் ப்ரோ லேப்டாப் போன்று வலுவானதாக இருக்கும் என்று நம்பலாம். முற்றிலும் அலுமினியம் கொண்டு இந்த லேப்டாப் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாலிகார்பனேட்டில் இருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை இந்த லேப்டாப்பில் இருக்காது.

இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.37 கிலோவாக உள்ளது. மிக மெலிதானதாக தயாரிக்கப்பட்டுள்ள இதன் தடிமன் 14.9mm தான் இருக்கிறது. ரியல் கிரீன், ரியல் ப்ளூ, ரியல் கிரே ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளின் இந்த லேப்டாப் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆபத்தாகும் VLC மீடியா பிளேயர் – ஹேக்கர்கள் நோட்டமிடுவதாக தகவல்!

ரியல்மி புக் பிரைம் வன்பொருள் (Realme Book Prime Hardaware)

கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பை உறுதிசெய்த ரியல்மி நிறுவனம், அதன் வன்பொருள் பக்கத்தையும் நேர்த்தியாக தேர்வு செய்துள்ளது.
Intel i5 11th Gen
புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 10nm நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட வில்லோ கோர் சிபியு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புராசஸர் 4.5Ghz ஜிகாஹெர்ட்ஸ் வரை வேகத்தை உமிழும் திறன் கொண்டது. புதிய Iris Xe கிராபிக்ஸ் எஞ்சின் இந்த ஹார்வேருடன் நிறுவப்பட்டுள்ளது. மொத்தமாக வன்பொருள் கட்டமைப்பை குளிரூட்ட வேப்பர் சேம்பர் லிக்விட் கூலிங் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய OnePlus டிவி அறிமுகம் – இனி வீட்டிலேயே மினி தியேட்டர் அனுபவம்!

ரியல்மி புக் பிரைம் ஸ்டோரேஜ் மற்றும் இதர அம்சங்கள் (Realme Book Prime Storage)

புதிய
ரியல்மி லேப்டாப்
பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டுக்காக Dolby DTS Surround ஒலி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி ஆதரவுடன் 12 மணிநேரம் வரை தாங்கும் 54Wh பேட்டரி இந்த

டுயல் சேனல் 16GB LPDDR4X ரேம் மெமரி வரை வழங்கப்படுகிறது. சேமிப்பு மெமரியாக 512GB SSD ஸ்டோரேஜ் வரை இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக் இந்த லேப்டாப்பில் கைரேகை சென்சார், வைஃபை 6, தண்டர்போல்ட் 4 ஆகிய இணைப்பு ஆதரவுகளும் உள்ளன.

டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!

ரியல்மி புக் பிரைம் விலை (Realme Book Prime Price in India)

இதன் 16ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.64,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 13, 2022 அன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக HDFC Credit மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.