தினமும் குப்பை அள்ளும் பணி, கொசுமருந்து அடிப்பதை கண்காணிக்க வேண்டும்- கவுன்சிலர்களுக்கு மேயர் அறிவுறுத்தல்

சென்னை:

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் மக்கள் பணியாற்ற புதிய கவுன்சிலர்கள் கடந்த மாதம் பொறுப் பேற்றுக்கொண்டனர். இதையடுத்து வார்டுகளில் அடிப்படை பணிகள் தற்போது வேகமாக நடைபெற தொடங்கியுள்ளன.

முக்கிய பணிகளான குப்பை அள்ளுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொசுமருந்து தெளிப்பதை காலை, மதியம், மாலை நேரங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் மேயர் பிரியா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தங்கள் பகுதியை சேர்ந்த வார்டுகளை கவுன்சிலர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் மக்களின் அடிப்படையான சுகாதார குடிநீர் பிரச்சினைகள், கழிவு நீர் அடைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெருக்களில் குப்பைகளை சேகரிக்க வரும் சுகாதாரப் பணியாளர்கள் வருகை பதிவேட்டை கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குப்பை தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும். கொசு மருந்து அனைத்து பகுதிகளுக்கும் தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து வார்டு பணிகளை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம்- நாளை நள்ளிரவு தொடங்குகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.