உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி ரஷ்யா, பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தது.
உலக நாடுகள் தொடர்ந்து கட்டம் கட்டி தடைகளை விதித்து ரஷ்யா-வை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க முயற்சி செய்து வரும் நிலையில், ரஷ்யாவுக்குப் பல நாடுகள் தொடர்ந்து ஆதரவும், நட்புறவையும் கொண்டு கச்சா எண்ணெய் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அரசின் பொருளாதார ஆலோசகர் ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டு உள்ளார்.
விளாடிமிர் புதின் சகாப்தம் முடிந்தது..? 2 வருடம் தான்..!!
ஒலெக் உஸ்டென்கோ
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ, உக்ரைன் போர் ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யாவின் வர்த்தகம், பணப்புழக்கத்தைத் தடுக்க உலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையிலும் ரஷ்யா தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது தடை
ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து மட்டும் ஒரு நாளுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது 7608 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ரஷ்யா சம்பாதிக்கிறது வருகிறது என ஜெலென்ஸ்கி-யின் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்
இந்நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தைத் தடுக்கப் புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்றும் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஒலெக் உஸ்டென்கோ. இதேவேளையில் ஐரோப்பியா நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-ஐ அதிகரித்துள்ளது.
OPEC நாடுகள்
மேலும் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உலக நாடுகள் தங்களது உற்பத்தி அளவுகளை அதிகரித்தால் கட்டாயம் விலை குறைப்புச் சாத்தியம். குறிப்பாக OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தினால் போதும், ஆனால் OPEC நாடுகளிடம் உற்பத்தியை அதிகரிக்க எவ்விதமான திட்டமும் இல்லை என உக்ரைன் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பாதிப்பு
ரஷ்யாவின் தாக்குதல் மூலம் உக்ரைன் நாட்டின் பொருட் சேதம், வரத்தகப் பாதிப்பு, நிதியியல் பாதிப்பு, மக்கள் துயரம், உயிர் சேதம் எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் பாதிப்பை தீர்க்க உலக நாடுகள் பணம் மற்றும் பொருள் உதவிகளை அளித்து வருகிறது.
Putin earns $1 billion a day from oil alone says Zelenskyy’s economic adviser Oleg Ustenko
Putin earns $1 billion a day from oil alone says Zelenskyy’s economic adviser Oleg Ustenko தினமும் ரூ.7600 கோடி சம்பாதிக்கும் புதின்.. அப்போ தடையெல்லாம் வீணா..?