பத்ரா புலிகள் வனப்பகுதியில் ஜீப்களில் பயணியர் அட்டூழியம்| Dinamalar

ஷிவமொகா, : ஷிவமொகா பத்ரா புலிகள் வனப்பகுதிக்குள், அத்துமீறிய சுற்றுலா பயணியர், ‘ஜீப்’ வாகனங்களில் பந்தயம் நடத்தியது, வனத்துறையினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவிலுள்ள காடுகளில் வேட்டையாடுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல, சுற்றுலா பயணியர் விதிமுறைகளை மீறுவதும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சந்தோஷமடைவதும் அதிகரித்துள்ளது.

தற்போது மேலும் ஒரு ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், ஷிவமொகா பத்ரா புலிகள் வனப்பகுதியில் ஓடும் தண்ணீரில், இரு ஜீப்களில் வந்த சுற்றுலா பயணியர், போட்டி நடத்தியுள்ளனர்.இந்த வீடியோ வைரலானதால், வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் என விசாரிக்கப்படுகின்றனர்.பத்ரா வனப்பகுதிக்கு உட்பட்ட ஹெப்பே மலைத்தொடரில் வசிக்கும் பழங்குடியினர், இந்த சம்பவம் ஒரு வாரத்துக்கு முன் நடந்தது என கூறியுள்ளனர்.பாதுகாவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இரு ஜீப்கள் சென்றுள்ளன. இப்பகுதியிலிருந்து 20 – 25 கி.மீ., தொலைவில் சுற்றுலாப் பயணியர் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ‘வீடியோவில் உள்ளவர்களை பார்க்கும் போது, இப்பகுதியை சேர்ந்தவர்களாக தெரியவில்லை. வனப்பகுதிக்கு உட்பட்ட ரிசார்ட்களில் தங்கியிருந்தவர்களாக இருக்கலாம்’ என்றனர்.கடந்த சில மாதங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் மூன்றாவது முறையாக நடந்துள்ளது. இது குறித்து பத்ரா புலிகள் காப்பக இயக்குனர் பிரபாகரன் கூறியதாவது:பைரவேஸ்வரர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, வனப்பகுதிக்குள் நுழைய உள்ளூர் மக்களுக்கு அனுமதி வழங்குகிறோம். உள்ளூர் மக்கள் என கூறி, இந்த கும்பல் நுழைந்திருக்கலாம். விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.