புதுச்சேரி : குபேரன் நகர் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 16ம் தேதி நவசண்டி மகா யாக பெருவிழா நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் புறவழிச் சாலை, டோல்கேட் அருகே உள்ள குபேரன் நகரில் ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், வரும் 16ம் தேதி, 9ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, நவசண்டி மகா யாக பெருவிழா நடக்கிறது.இவ்விழா, வரும் 15ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கரக ஹோமம், மாத்ருக பூஜை, ஆச்சார்யவரணம், கலச ஸ்தாபனம் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு மண்டப பூஜை, முதல்கால சண்டிகா நவாவரண பூஜை, 64 யோகனி பூஜை, 64 பைரவ பூஜை நடக்கிறது.
16ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல் மண்டப பூஜை, சண்டிகா நவாவரண பூஜையை தொடர்ந்து சண்டி ஹோமம் நடக்கிறது. அதில், 13 அத்யாய ஹோமங்கள், பூர்ணாஹூதி, வசோத்தாரா ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, பூர்ணாஹூதி நடைபெறுகிறது.கலசம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து, ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரிக்கு அபிஷேகம், நிவேதனம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இரவு 7:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, நவாவரண பூஜை, உபசாரம், உள்புறப்பாடு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
Advertisement