சென்னை: பாலியல் புகார் காரணமாக, இரண்டு ஐஐடி சென்னை பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அதே துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்த மாணவர்கள், துறையின் Co-Guides மற்றும் பேராசிரியர் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்த தாக மாணவி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின்படி, 2016 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் இணைந்தது முதலே, கிங்ஷூக்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இந்த வழக்கை எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் 8 பேர் மீது கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். கடந்த ஆண்டு மே மாதம் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 8 பேரில் கிங்ஷூக்கும் ஒருவர் ஆவர். மற்றவர்கள், சுபதிப் பானர்ஜி, மலாய் கிருஷ்ணா மஹதோ, ரவீந்திரன், எடமான் பிரசாத், நாராயண் பத்ரா, சௌரவ் தத்தா மற்றும் அயன் பட்டாச்சார்யா ஆகும்.
2018 ஆம் ஆண்டு கூர்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற போது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிறுவன வளாகத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் தன்னை படமெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 2 பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, வழக்கை வரும் 18ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
விசாரணையின்போது, முதல் இரண்டு குற்றவாளிகளால் புகார்தாரர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல சந்தர்ப்பங்களில் துன்புறுத்தப் பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது, முதல் குற்றவாளியான பி. கிங்ஷுக் தேப்சர்மா மற்றும் இரண்டாவது குற்றவாளிக்கு எதிராக முக்கியமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஆனால், இது தொடர்பாக மெட்ராஜ் ஐஐடி நடத்திய உள் விசாரணையில் எந்தவொரு குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசித்திரமாக, அவர்களின் பெயர்கள் குற்றம் சாட்டப்பட்டதாக FIR இல் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன், “மனுதாரர்கள் தாங்கள் ஆசிரியர்களாக இருந்து சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியதுடன், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ம் கடைப்பிடிப்பதாக உறுதியளிப்பதாக கூறி முன்ஜாமீன் கோரினர்.
இதையடுத்து, காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்க 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.