பிளஸ் 2 தேர்வுக்கு 14,647 மாணவ, மாணவியர்…செய்முறை தேர்வுகள் 25ம் தேதி துவக்கம் புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லை. ஆரம்ப கல்வியில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டமும், உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு மாநில பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டத்தையும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டம், மாகியில் கேரள மாநில பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
பொதுத் தேர்வுகளும் அதன் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றுஇந்நிலையில், 2019-20 கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்தது. இதனால், 5 தேர்வுகள் முடிந்து, ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.மே மாதத்திற்கு பிறகு தொற்று பரவல் மேலும் தீவிரமடைந்தது. அதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், முடிவு அறிவிக்கப்பட்டது. பிற வகுப்பு மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டனர்.’
ஆல் பாஸ்’அதனைத் தொடர்ந்து, 2020-21 கல்வி ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர்.மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. இதனால், அந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை.அவர்கள் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. பிற வகுப்பு மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டனர்.
பள்ளிகள் திறப்பு பள்ளிகள் திறக்காத நிலையில், 2021-22 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்., 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.தேர்வுக்கு குறுகிய காலமே இருந்ததால், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மேலும், வழக்கமாக மார்ச் மாதத்தில் துவங்கும் பொதுத் தேர்வை, மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்வு அறிவிப்பு இந்நிலையில், தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம், 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான அட்டவணையை வெளியிட்டது.அதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் மே 5ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதி துவங்கி 31ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி துவங்கி, 30ம் தேதி முடிவடைகிறது.செய்முறைத் தேர்வு இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, வரும் 25ம் தேதி முதல் மே 2ம் தேதிக்குள் நடத்தி முடித்திட பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 7,660 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 647 பேர் பங்கேற்கின்றனர்.
இவர்களில், 6,371 பேர் அரசு பள்ளி மாணவ-மாணவியர் ஆவர்.அதேபோன்று, பிளஸ் 1 பொதுத் தேர்வை 7,831 மாணவிகள் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 174 பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8,064 மாணவிகள் உட்பட 16 ஆயிரத்து 831 பேர் எழுத உள்ளனர்.இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஆல் பாஸ்’ முறையில் தேர்ச்சி பெற்று வந்து, முதல் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவிகளே அதிகம்புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 10ம் வகுப்பு தேர்வில் மாணவிகளை விட மாணவர்கள் 703 பேர் அதிகமாக பங்கேற்கின்றனர். ஆனால், பிளஸ் 1 தேர்வில் மாணவர்களை விட 488 மாணவிகளும், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களைவிட 673 மாணவிகள் கூடுதலாக பங்கேற்கின்றனர்.