விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படம் இன்று வெளியாகிவுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. எப்படி அஜித்தின்
வலிமை
படம்
அஜித்
ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக அமைந்ததோ அதேபோல் தான் பீஸ்ட் படமும்
விஜய்
ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக உள்ளது.
இதுவே பொதுவான ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.
இருப்பினும் படத்தில் காமெடி காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் நன்றாக இருப்பதாகவும், விஜய்யை படத்தில்
நெல்சன்
படு ஸ்டைலிஷாக காண்பித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் திரைக்கதையில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
பீஸ்ட் படத்துல அந்த சீன் வேற லெவல்..நெல்சனின் தரமான செய்கை..!
மேலும் பீஸ்ட் திரைப்படம் நெல்சனின் டார்க் காமெடி வகையிலான படமாக இல்லாமலும், விஜய்யின் கமர்ஷியல் படமாக இல்லாமலும் மத்தியில் இருப்பது படத்திற்கு பலவீனமாக இருக்கின்றது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் துவங்கிய பீஸ்ட் படத்தின் முன்பதிவு அமோகமாக அமைந்ததால் இப்படம் முதல் மூன்று நாட்களிலேயே வசூலை ஈட்டி லாபகரமான படமாக அமைந்துவிடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விஜய்
அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான செம்பியன் பீஸ்ட் படத்தைப்பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பீஸ்ட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகின்றது.
பீஸ்ட்
மேலும் இதற்கு முன் இருந்த அனைத்து ரெகார்டையும் பீஸ்ட் திரைப்படம் அடித்து நொறுக்கியுள்ளது. அனைவர்க்கும் நன்றிகள் என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
ஏனென்றால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்த குறையுமின்றி இருந்தாலே போதும் என்பதே தற்போது விஜய் ரசிகர்களின் மனநிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி வழியில் செல்கிறாரா விஜய்?