பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு எதிராக 90 ஆயிரம் கருத்துக்கள் வந்துள்ளது எனவும், அந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலானவை ஒரேமாதிரியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த கூட்டத்தொடரில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கல்வி, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் பாஜக எம்.பி வினை சகஸ்ரபுத்தே தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் முப்பத்தி ஒன்று உறுப்பினர்களில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுவரை 95 ஆயிரம் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும் அதில் 90 ஆயிரம் மின்னஞ்சல்கள் மசோதாவிற்கு எதிராக வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.