வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளன என்று சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: பைசர் மற்றும் மாடர்னா போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை விட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளன. பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாதது நல்லது. ஏனென்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2 மற்றும் 3வது பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பலர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்தியாவில், எங்கள் தடுப்பூசிகள் நல்ல பாதுகாப்பைக் கொடுத்துள்ளன. நாங்கள் இதுவரை 80க்குமு் மேற்பட்ட நாடுகளுக்கு 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டை ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது கோவிட் பாதிப்புகள் குறைந்து வருவதால், தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி செலுத்திய சில நாடுகளில், வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்காததால், அந்த நாடுகளில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement