பெங்களூரு : பீர் மதுபானத்தை கடைகளுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வால், அதன் விலையை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.கர்நாடகாவில் 2022- – 23- பட்ஜெட்டை, முதல்வர் பசவராஜ் பொம்மை மார்ச்சில் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட்டில் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதித்து, அதன் விலை உயர்த்தப்படும்.
ஆனால், இம்முறை வரி உயர்த்தப்படவில்லை.பட்ஜெட்டில் வரி உயர்த்தப்படாததால் மதுபானங்களின் விலை கர்நாடகாவில் உயர்த்தப்படாது என்று கலால் துறை அமைச்சர் கோபாலய்யாவும் தெரிவித்திருந்தார்.ஆனால் சமீபமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் கடைகளில் விற்க மதுபானங்களை எடுத்து செல்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது.இது குறித்து கலால்துறைக்கு கோரிக்கை விடுத்தது. விலை உயர்த்துவது குறித்து கலால் துறையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வரும் 15 முதல் விலை உயர்வு அமலுக்கு வரலாம். ஒரு பாட்டீல் பீர் விலை, ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளது.
Advertisement