தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன.
தாவூத் இப்ராகிமுடன் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.
தற்போது, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், அவரது சொத்துகளை அமலாக்கத் துறையினர் தற்காலிகமாக முடக்கி உள்ளனர். இதற்கிடையே, சிறையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நவாப் மாலிக் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.