மைசூரு : காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பி பேத்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பியும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான சங்கிராம் சிங் பேத்தி தர்மஸ்ரீ.மைசூரு ராஜாஜிநகரில் வசிக்கும் இவர், சட்டபடிப்பு படித்து சுய தொழில் செய்கிறார்.
நேற்று இவர், திடீரென மைசூரு பிரஸ்கிளப்பில் நடந்த எளிய நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிருத்வி ரெட்டி, தர்மஸ்ரீக்கு கட்சியின் தொப்பி அணிவித்து வரவேற்றார்.பின், அவர் கூறியதாவது:மற்ற கட்சிகள் மாநிலத்தை அபிவிருத்தி செய்யாமல், வகுப்புவாத பெயரில் அரசியல் செய்கின்றன. டில்லி போல கர்நாடகாவும் முன்னேற்றம் காண வேண்டும்.ஊழலற்ற ஆட்சி வழங்குவதாலும், மகளிருக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதாலும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மைசூரு : காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பி பேத்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பியும், ஓய்வுபெற்ற போலீஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.