மீண்டும் வெடிக்கும் சிம்பு vs தனுஷ் மோதல்: பரபரக்கும் கோலிவுட்..!

‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு
கெளதம் மேனன்
இயக்கத்தில் ‘
வெந்து தணிந்தது காடு
‘ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு
சிம்பு
, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப்படத்திற்காக காத்து வருகின்றனர்.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், தற்போது சிலம்பரசன் நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்தப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் ‘கே.ஜி.எஃப் 2’: ராக்கி பாய் ஆட்டம் ஆரம்பம்..!

இந்தப்படத்தின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை முடித்த கையோடு ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் சிம்பு.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘
நானே வருவேன்
‘ படப்பிடிப்பு முடிவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்
தனுஷ்
. இந்நிலையில் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பும் இன்னும் சில தினங்களில் முடிவடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

KGF2 vs BEAST – எந்த படம் ஹிட் ஆகும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.