உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் அமர்ந்தப்படி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
சீதாபூரில் ஒரு மசூதிக்கு அருகே அவரது ஜீப் பயணித்தபோது, “இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், அந்த சமூக பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
சாமியாரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சை சாமியார்
மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்தது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சை சாமியார் மீது, உத்தரப் பிரதேச மாநில போலீசார் அண்மையில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆன நிலையில் இன்று அலர் கைது செய்யப்பட்டார்.