சூரியக் குடும்பத்தில் உள்ள 8 கோள்கள் சூரியனைச் சுற்றி வருவதோடு தன்னைத் தானே சுற்றி வருகின்றன. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. 800 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வியாழன் – சனி கோள்கள் வானில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றின.
இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 6 டிகிரி இடைவெளியில் ஒன்றுக்கொன்று நெருங்கி வந்தன. ஏப்ரல் முதல் வாரத்தில் சனியும், செவ்வாயும் நிலவின் சுற்றளவை விட குறைந்த தூரத்தில் சந்தித்தன. பின்னர் சனி மற்றும் செவ்வாய் கோள்களுக்கான இடைவெளி அதிகரித்தது. பின்னர் ஏப்ரல் 3-வது வாரத்தில் இந்த இரு கோள்களுடன் வியாழனும் நேர்க்கோட்டில் சந்திக்க உள்ளது. இதனை சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.
மேலும் படிக்க | ISSக்கான முதல் தனியார் விண்வெளி வீரர்களின் மிஷன் தொடங்கியது
In early April, Venus, Mars, and Saturn form a trio in the sky. Not to be left out, catch Jupiter similarly close to Venus on April 30.
More of “what’s up” this month: https://t.co/TSK1zbIbrc pic.twitter.com/UJHKpGmNro
— NASA (@NASA) March 31, 2022
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் கடைசி வாரத்தில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவுள்ளன. இந்த நிகழ்வை வானியல் நிபுணர்கள் மிகவும் ஆர்வமாக எதிர் நோக்கியுள்ளனர். ஏப்ரல் 30-ம் தேதி 4 கோள்களும் ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் நட்சத்திரம் போலத் தெரியும். அப்போது அவை மிகப்பிரகாசமாக தோன்றும். நம் கண்களால் பார்க்கும்போது அவை மிக நெருக்கத்தில் உள்ளது போல் தோன்றினாலும் ஒவ்வொரு கோள்களுக்கு இடையே பல பில்லியன் கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
மேலும் படிக்க | விண்வெளி பயணத்தில் கால் பதிக்கும் தனியார் நிறுவனம்; வரலாறு படைக்கும் AXIOM SPACE
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR