புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில், கல் வீசியதாக 80 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக கட்டி இருந்த 50 கட்டுமானங்களை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் ஏற்றி அழித்தது.
இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை மக்களை திணறடித்து வருகின்றன. அந்த பிரச்சினைகள் மீது மத்திய அரசு புல்டோசரை ஏற்ற வேண்டும். ஆனால், பா.ஜனதாவின் புல்டோசரோ, வெறுப்பையும், அச்சுறுத்தலையும் சுமந்து செல்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.