வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!

பயனர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ஒப்போ நிறுவனத்தின் பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும்
Qualcomm Snapdragon
6 சீரிஸ் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியீட்டுக்கு முன்னர் கசிந்த தகவல்களின்படி, 4ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் ரூ.20,000க்கும் கீழ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தையில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை விட அதிகமான விலையில், புதிய ஒப்போ பிரீமியம் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, பட்ஜெட் மிட் ரேஞ்ச் புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரியல்மி 9 சீரிஸ் போன்கள் ரூ.23,000 ரேஞ்சில் OIS கேமராவுடன் கிடைக்கிறது. ஆனால், புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் இது போன்ற சிறந்த கேமரா தொழில்நுட்பத்தின் ஆதரவு இல்லை என்பது வேதனைக்குரியது.

போன் இன்னும் வெளியாகல; அதுக்குள்ள லீக்கான விலை விவரங்கள்!

ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி சிறப்பம்சங்கள் (Oppo F21 Pro Specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 6.43″ இன்ச் அளவு கொண்ட ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரெப்ரெஷ் ரேட் 90Hz ஆக உள்ளது. 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை இது ஆதரிக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இதற்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS 12.1 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. Qualcomm ஸ்னாப்டிராகன் 680 4ஜி சிப்செட் கொண்டு ஒப்போ எஃப்21 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இயங்குதள அப்டேட் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஒப்போ எஃப்21 ப்ரோ கேமரா (Oppo F21 Pro Camera)

கேமராவைப் பொருத்தவரை 64MP மெகாபிக்சல் f/1.7 6P லென்ஸ் கொண்ட முதன்மை கேமரா, 2MP மெகாபிக்சல் மைக்ரோஸ்கோப் கேமரா, 2MP மெகாபிக்சல் மோனோ கேமரா என டிரிப்பிள் கேமரா அமைப்பை பின்பக்கத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேயில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 8ஜிபி LPDDR4x ரேம் மெமரியும், 128ஜிபி UFS2.2 ஸ்டோரேஜ் மெமரி ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார், ப்ளூடூத் 5.1, வைஃபை 5, 3.5mm ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவும் இதில் உள்ளது. NFC இணைப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை.

ஒப்போ எஃப்21 ப்ரோ பேட்டரி (Oppo F21 Pro Battery)

ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4385mAh (Rated Value) பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஜியோமேக்னெட்டிக், கைரோஸ்கோப், ஜிபிஎஸ் போன்ற சென்சார்களும் இதில் உள்ளது. இரட்டை 4ஜி சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், எஸ்டி கார்ட் ஆதரவும் உள்ளது.

ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:

பெரும்பாலான அம்சங்கள் அனைத்தும் 4ஜி வேரியன்ட் போனை ஒத்ததாகவே இருக்கிறது. முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே வெறும் 60Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை மட்டும் தான் பெறுகிறது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.

பேட்டரி, கேமரா முதற்கொண்டு அனைத்துமே 4ஜி வேரியன்ட் போன்றே இருக்கிறது. ஆனால், இங்கு 5ஜி புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், அட்ரினோ 619 கிராபிக்ஸ் எஞ்சினுடன் நிறுவப்பட்டுள்ளது. NFC குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.

ரஷ்யாவின் நாடாளுமன்ற யூடியூப் சேனல் முடக்கம் – கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரசு!

ஒப்போ எஃப்21 ப்ரோ சீரிஸ் விலை

Oppo F21 Pro
ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், சன்செட் ஆரஞ்ச் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 8GB + 128GB வேரியன்ட் விலை ரூ.27,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ.22,999 என்ற விலைக்கு இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்க முடியும்.

Oppo
F21 Pro 5G ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், ரெயின்போ ஸ்பெக்ட்ரம் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 8GB + 128GB வேரியன்ட் விலை ரூ.31,999 ஆக உள்ளது. இந்த போனின் அறிமுக சலுகை விலை ரூ.26,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான், ஒப்போ தளங்களில் இருந்து பயனர்கள் வாங்கலாம். இதன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஏப்ரல் 21, 2022 முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக 10% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒப்போ எஃப்21 ப்ரோ சீரிஸ் வாங்கலாமா?

புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களில் புதுமை என்னவென்றால், பின்புற பேனல் கிளாஸ் லெதர் பினிஷ் என நிறுவனம் கூறுகிறது. மேலும், இதன் கேமரா சுற்றுவட்ட பாதையில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போனில் புதுமையான தொழில்நுட்பம் என்பது எதுவும் இல்லை.

எனினும், சந்தையில் இதே புராசஸர் உடன், அமோலெட் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை, இதை விட குறைவாக இருப்பது ஒப்போ நிறுவனத்திற்கு ஏன் தெரியாமல் போனது என்று யூகித்துப் பார்க்க முடியவில்லை.

புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் குறித்த உங்கள் பார்வையை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.

Oppo-F21-Pro விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 680டிஸ்பிளே6.43 inches (16.33 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 2 MP + 2 MPபேட்டரி4500 mAhஇந்திய விலை22999ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.