வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்க, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில், கொரோனா தாக்கத்தால் சுற்றுலா வருவாய் வீழ்ச்சி அடைந்தது. இதனால் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது.இந்தப் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கைக்கு முக்கியமாக தேவைப்படும் அந்நிய செலாவணியை அனுப்பி, நாட்டிற்கு உதவ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் முன்வர வேண்டும். இதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வங்கிக்கணக்கு துவக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பும் பணமானது, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement