கொழும்பு: இலங்கை மத்திய வங்கி ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்ற நந்தலால் வீரசிங்கே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் 193 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் இந்தாண்டு 400 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.
கடனை திருப்பிச் செலுத்த இலங்கை ஒரு போதும் தவறியதில்லை. நம்பிக்கையுடன் மாற்றுநடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. புதிய கடன்தாரர் கள் மற்றும் சர்வதேச நிதியத்துடன் ஒப்பந்தங்கள் செய்யும்வரை, வெளிநாட்டு கடன்களை அடைப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்.
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கடன்களை அடைப்பது பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
இவ்வாறு நந்தலால் வீரசிங்கே கூறினார்.