கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் விஜய் ரசிகர்களை கவர்வதற்காக பீஸ்ட் விஜய் மாதிரியான தோற்றத்தில் பைபரால் செய்யப்பட்ட சிலை ஒன்றை வைத்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு சிலை என்றதுமே.. இந்த சிலையாவது விஜய் மாதிரி இருக்கிறதா பாருங்கள் ? என்று சொல்ல தோன்றுகிறது கடந்த காலத்தில் ரசிகர்களின் அன்பு மிகுதியால் உருவாக்கப்பட்ட நடிகர் விஜய்யின் சிலைகள்..! ஒவ்வொன்றும் வேற மாறி..! வேற மாறி..! இருந்தது
அந்தவகையில் ஈரோடு மாவட்ட கோபிச்செட்டிப்பாளையம் மொடச்சூரில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் விஜய்க்கு சிலை திறக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தனர். பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என்றாலும் அங்கு வந்திருந்த 25 பேர் முன்னிலையில் முக்காடு போட்டு நிறுத்தி வைக்கப்ப்டிருந்த அந்த சிலையை சிறுவன் ஒருவன் முக்காடை இழுத்து திறந்து வைத்தான்.
பீஸ்ட் மோடுக்கு மாறிய ரசிகர்கள் அங்கிருந்த பொம்மை துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு விஜய் மாதிரியே போஸ் கொடுத்து அந்த சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்தும் கொண்டனர்.
பீஸ்ட் படத்தின் விஜய் என்று சிலையை செய்யக்கொடுத்தவர் கூறிய நிலையில் சிலையை பார்த்தடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் ஞாபகம் வருவதாக சிலர் கமெண்ட் அடித்துச்சென்றனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் பாலசிங்கம் கூறும் போது பெரும்பாலான இளையதலைமுறையினர் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்த்து ஆன் லைனில் பொருட்களை வாங்கி வருகின்றனர் அவர்களை தங்கள் கடைக்கு வரவைப்பதற்காகவே நடிகர் விஜய்யின் சிலையை சென்னையில் ஆர்டர் கொடுத்து செய்து, இங்கு வைத்திருப்பதாக தெரிவித்தார்.