வேலூர் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Vellore HRCE JC and AC office recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், வேலூர் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

பணியிடம் : வேலூர் உதவி ஆணையர் அலுவலகம்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

ஓட்டுநர் (Staff Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

பணியிடம் : வேலூர் இணை ஆணையர் அலுவலகம்

பணியிடம் : வேலூர் உதவி ஆணையர் அலுவலகம்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: Google fresher job 2022: கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? சூப்பர் சான்ஸ்; உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி 

அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு: உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.309, இரண்டாவது தளம், ஆற்காடு ரோடு, காகிதப்பட்டறை, வேலூர் – 12

ஓட்டுனர் பணியிடங்களுக்கு: இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.308, முதல் தளம், ஆற்காடு ரோடு, காகிதப்பட்டறை, வேலூர் – 12

விண்ணப்பிக்க கடைசி தேதி  

உதவி ஆணையர் அலுவலகம் : 24.04.2022

இணை ஆணையர் அலுவலகம் : 21.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்புகளைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.