கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. மீன்கள் உற்பத்திக்காக இந்த மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த காலங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மின்பிடி தொழிலில் ஈடுபட மாட்டார்கள். இந்த காலங்களில் மீன்பிடி வலைகளை சரிசெய்தல், படகுகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள்.
ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப் அமலுக்கு வருவதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் 14ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ளதால், அனைத்து விசைப்படகுகளும் 14 ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும்,
தாமதமாக வரும் விசைப்படகுகள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.