இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கமானது 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதே தொழில்துறை உற்பத்தி விகிதம் தொடர்பான குறியீடானது பிப்ரவரி மாதத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆக தற்போது சந்தையானது ஏற்றத்தினை கண்டாலும், மீண்டும் சந்தையில் இதன் தாக்கம் இருக்கலாமோ என்ற அச்சத்தினையும் முதலீட்டாளார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் 2 நாட்களுக்கு பிறகான ஏற்றமானது குறைந்த விலையில் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் ரூ.7600 கோடி சம்பாதிக்கும் புதின்.. அப்போ தடையெல்லாம் வீணா..?
சர்வதேச சந்தைகள் நிலவரம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்துள்ளது. எனினும் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 12 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 3128.39 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 870.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 290.94 புள்ளிகள் அதிகரித்து, 58,867.31 புள்ளிகளாகவும், நிஃப்டி 6.20 புள்ளிகள் அதிகரித்து, 17,536.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 267.36 புள்ளிகள் அதிகரித்து, 58,843.73 புள்ளிகளாகவும், நிஃப்டி 88.40 புள்ளிகள் அதிகரித்து, 17,613.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1705 பங்குகள் ஏற்றத்திலும், 332 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஓ.என்.ஜி.சி ஆயில், எம்.ஜி.எல், இன்ஃபோசிஸ், ஏர்டெல், ஸ்பஸ்ஜெட், டிவிஎஸ் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டென் நெட்வொர்க்ஸ், ஹரியோம் பைப் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஆயில் & கேஸ் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் இருந்தாலும், 1% கீழாகவே சற்று அதிகரித்து காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஜெ.எஸ்.டபள்யூ ஸ்டீல். அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில்ம் ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்றே ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 365.58 புள்ளிகள் அதிகரித்து, 58,941.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 116.45 புள்ளிகள் அதிகரித்து, 17,646.750 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices open higher after 2 days fall: stocks to watch in Infosys
opening bell: indices open higher after 2 days fall: stocks to watch in Infosys /2 நாட்களுக்கு பிறகு முதலீட்டாளர்கள் ஹேப்பி.. சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்.. எவ்வளவு அதிகரிப்பு!