ஆசிய சந்தையில் கலவையான வர்த்தகச் சூழ்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் உயர்ந்தாலும் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு 10 புள்ளிகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு எதிரொலி முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் உலக நாடுகளில் பல தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்று இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. மேலும் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று சர்வதேச சப்ளை செயின்-ஐ பாதிக்கும் அச்சம் நிலவுகிறது.
ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 15 புனித வெள்ளி காரணமாகப் பங்குச்சந்தை இரண்டு நாள் விடுமுறை. இதனால் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் இன்று என்பதால் முதலீட்டாளர்கள் அடுத்த 4 நாட்களுக்குப் பாதிப்பு ஏற்படாத பங்குகளில் முதலீடு செய்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
Apr 13, 2022 1:53 PM
லெமன்ட்ரி ஹோட்டல் பங்குகள் 4.43 சதவீதம் உயர்வு
Apr 13, 2022 1:53 PM
டூரிசம் மற்றும் ஹஸ்பிடாலிட்டி பங்குகள் உயர்வு
Apr 13, 2022 1:52 PM
பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 30 வருட உயர்வான 7.0 சதவீதத்தை அடைந்துள்ளது
Apr 13, 2022 1:52 PM
இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் இன்போசிஸ் பங்குகள் வெறும் 0.50 சதவீத உயர்வில் உள்ளது
Apr 13, 2022 1:52 PM
வெயில் காலம் துவங்கியதால் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகளுக்கு 920-930 ரூபாய் டார்கெட் விலையைக் கொடுத்துள்ளது
Apr 13, 2022 1:52 PM
டாடா ஸ்டீல் பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்வு
Apr 13, 2022 1:51 PM
மார்ச் மாத முடிவில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 35.7 சதவீதமாக உயர்வு
Apr 13, 2022 1:51 PM
சோமேட்டோ பங்குகள் 3.45 சதவீதம் அதிகரித்து 84.95 ரூபாயாக உள்ளது
Apr 13, 2022 1:51 PM
ஜன்டால் ஸ்டீல் விற்பனை அளவு 23 சதவீதம் உயர்வு
Apr 13, 2022 1:51 PM
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 2.38 சதவீதம் உயர்வு
Apr 13, 2022 12:11 PM
DGCA சுமார் 90 ஸ்பைஸ்ஜெட் பைலட்களை 737மேக்ஸ் விமானத்தை இயக்க தடை விதித்துள்ளது
Apr 13, 2022 12:10 PM
90 ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு தவறான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது
Apr 13, 2022 12:10 PM
டியோரோப்ளை பங்குகள் 10 சதவீதம் உயர்வு
Apr 13, 2022 12:10 PM
10 வருட பத்திர முதலீட்டின் வட்டி லாபம் 7.28 சதவீதமாக உயர்வு
Apr 13, 2022 12:10 PM
என்டிபிசி நிறுவனத்தின் 24 லட்சம் பங்குகள் பிளாக் டீலில் விற்பனை
Apr 13, 2022 12:09 PM
ஹேத்வே கேபிள் நிறுவனத்தின் லாபம் 61 சதவீதம் சரிவு, இன்று பங்குகள் 2.68 சதவீதம் சரிவு
Apr 13, 2022 12:06 PM
Mrs.பெக்டர்ஸ் புட்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிவு
Apr 13, 2022 12:06 PM
சென்செக்ஸ் குறியீடு வெறும் 30 புள்ளிகள் உயர்வில் 58606.81 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 13, 2022 12:05 PM
நிஃப்டி குறியீடு 19.65 புள்ளிகள் உயர்ந்து 17,549.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 13, 2022 12:05 PM
மார்ச் மாதம் நுகர்வோர் பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்வு
Apr 13, 2022 12:04 PM
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 350 புள்ளிகள் வரையில் உயர்வு
Apr 13, 2022 12:04 PM
ஷாங்காய்-யில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
Apr 13, 2022 12:04 PM
2022ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவை மற்றும் பயன்பாடு குறையும்
Apr 13, 2022 12:04 PM
சிஎன்ஜி விலை கிலோவிற்கு 5 ரூபாய் உயர்வு
Apr 13, 2022 12:02 PM
பிஎன்ஜி விலை 4.50 ரூபாய் உயர்வு
Apr 13, 2022 12:02 PM
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா Ssangyong நிறுவனத்தின் விற்பனையை முடித்தது
Apr 13, 2022 12:01 PM
522 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியது தெர்மேக்ஸ்
Apr 13, 2022 12:01 PM
அமெரிக்கப் பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவு
Apr 13, 2022 12:01 PM
இன்று சீனா, ஹாங்காங் சந்தைகள் சரிவுடன் துவங்கியது
Apr 13, 2022 12:00 PM
ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 44 சதவீதம் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது
Apr 13, 2022 12:00 PM
இன்போசிஸ் பங்குகளில் கரெக்ஷன் வந்தால் முதலீடு செய்யச் சரியான தருணமாக இருக்கும் – தேவன் சோக்சி
Apr 13, 2022 12:00 PM
சரிவில் இருந்து மீண்ட இன்போசிஸ் பங்குகள்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 13: Infosys q4, Fed rate hike, china covid cases, global supply chain affected
sensex nifty live today 2022 April 13: Infosys q4, Fed rate hike, china covid cases, global supply chain affected ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. 2நாள் பங்குச்சந்தை விடுமுறை..!