சென்னை: வெளிநாடுகளுக்கு இதுவரை ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய், ரூ.0.99 லட்சம் மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப்பாலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின்அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாசர், அனிதா ராதாகிருருஷ்ணன் ஆகியோர் பதிலளித்தனர்.