9 மாதக் குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய் – வீடியோ வைரலான நிலையில் தாய் கைது

ஜம்மு காஷ்மீரில் 9 மாத கைக்குழந்தையை கொடூரமாக ஈவு இரக்கமின்றி தாக்கும் கொடூரத் தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பெண், தனது மடியில் படுத்திருந்த குழந்தையை, கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெறித்ததோடு, மெத்தையில் தூக்கி வீசும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதனை அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், அவர்களும் குழந்தையை தாக்குவதை தடுக்கவில்லை. குழந்தையின் தந்தை வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் தாய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

This woman has been arrested by the #Samba district police in #Jammu region of #JammuAndKashmir after video emerged of her brutally thrashing and torturing a child. pic.twitter.com/CrzjvTNp6n

— Dr.Satwant Singh Rissam, Ph.D (@satwantrissam) April 11, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.