பீஸ்ட் படம் ரிலீஸாகியிருக்கும் வேளையில் மற்ற மொழிகளில் Mall Hijack/Hostage இப்படியான ஜானரில் எடுக்கப்பட்ட படங்களை ஒரு ரவுண்ட்ஸ் பார்த்துட்டு வந்துடுவோம். வாங்க!
Terror in the Mall 1998-ல் வெளிவந்த இந்தப் படத்தில் வெள்ளத்தின் காரணமாக மக்கள் மாலில் தஞ்சம் அடைவார்கள். ட்விஸ்ட் என்னவென்றால் இவர்களோடு சிறையில் இருந்த தப்பி வந்த குற்றவாளியும் உடன் இருப்பான்.
2013 கென்யாவில் நடைபெற்ற Westgate shopping mall தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப் படமான இந்த Terror at the Mall 2014-ல் வெளிவந்தது.
சோமாலிய நாட்டில் கென்ய ராணுவத்தின் நுழைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. 71 பேர் இதில் கொல்லப்பட்டனர். ராணுவம் உள்நுழைவதற்கு முன்பு வரை மூன்று நாள்களுக்கு மால் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
Chopping Mall (1986) Sci-Fi வகையைச் சேர்ந்த இந்தப் படம் மாலுக்குள் திருடர்களைப் பிடிப்பதற்காக அதிநவீனமாக வடிவமைக்கப்பட்ட மூன்று ரோபோக்கள் ‘சிவப்பு சிப் பொருத்தப்பட்ட எந்திரன்’ போல மாறுவதே படம்.
மாலில் பணி நேரம் முடிந்தும் அங்கு தங்கி ஜாலி பண்ணலாம் என நினைத்திருந்த மாலின் பணியாளர்களை ரோபோக்கள் காலி பண்ணுவதே படம். ஜாலியான ஹாரர் படம்.
Die Hard (1988) ஹாஸ்டேஜ் படங்களுக்கு முன்மாதிரியாக சொல்லப்படுகிற படம். ஜெர்மனிய தீவிரவாதிகள் பிணையாக வைத்திருக்கும் கட்டடத்தில் இருந்து தன் மனைவியையும் அங்கு மாட்டிக் கொண்டிருப்பவர்களையும் நாயகன் காப்பதே கதை. இந்த பட சீரிஸின் நான்காவது பாகம் 2007-ல் வெளியானது.
போஸ்டர் பார்த்ததுமே கண்டுபிடிச்சு இருப்பீங்க. இது ஹைஜாக் கதைதான். ஆனா மாலில் நடக்காது. ஸ்பெயின் நாட்டின் பணம் அச்சடிக்கும் Royal Mint -ல் சாவகாசமாக தங்கி வெளியே காத்திருக்கும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த வேலையை முடிச்சுட்டு மாலத்தீவு போல ஒரு தீவுக்கு பணத்தோடு பறக்கும் குற்றவாளிகளின் கதை.
ஃப்ரீ டைமில் கொக்கு, நரி என ஓரிகாமி செய்யும் புரோபசர் பின்னாடி நடக்கிற எல்லாவற்றையும் முன்கூட்டியே பிளாக் போர்டில் பாடம் எடுக்கும் அதிபுத்திசாலி. மொத்தம் 5 சீசன். உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி என போஸ்டர் அடிக்காதது மட்டுமே குறை.
சாம் ஆன்டன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்த கூர்கா படம் 2019-ல் வெளியானது. மாலில் மாட்டிக்கொள்ளும் மக்களை ஹீரோ எப்படி விடுவிக்கிறார் என்பதை காமெடியாக சொல்ல முயன்ற படம்.
வழக்கமாக கப்பலையோ விமானத்தையோ தங்களின் தேவைகளுக்காகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வில்லன்களை ஹீரோ எதிர்கொள்வது போலான படங்களுக்கு நம்மிடம் நிறைய உதாரணம் உண்டு. ஆனால் மால் ஹைஜாக் கொஞ்சம் புதுரகம் தான்.
ஹாஸ்டேஜ் படங்கள்னு லிஸ்ட் எடுத்தா நூற்றுக்கணக்கில் இருக்கும். பீஸ்ட் எப்படி இருக்குனு பொறுத்துதான் பார்க்கணும். நாங்க மிஸ் பண்ண, இதே ஜானரில் நீங்கள் பார்த்த படங்கள் எதுவும் இருந்தா கமென்ட்டில் சொல்லுங்க!