பஞ்சமி நிலம் குறித்த அவதூறு வழக்கில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேடை ஒன்றில் பேசிய எல் முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும்m அதற்கான மூலப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இது முரசொலி இடம் குறித்து அவதூறுப் பிரச்சாரம் என்று திமுகவின் ஆர் எஸ் பாரதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.