செல்வராகவன் இயக்கத்தில்
தனுஷ்
வித்தியாசமாக நடித்திருக்கும்
நானே வருவேன்
படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்
எல்லி அவ்ரம்
.
ஸ்வீடனை சேர்ந்த எல்லி அவ்ரம் தனுஷ் பற்றி கூறியதாவது,
தனுஷுடன் சேர்ந்து நடித்தது ஒரு கனவு போன்று இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அனைத்து மொழி படங்களில் நடித்தாலும், பந்தாவே இல்லாத ஆள் தனுஷ்.
சக நடிகர் ஆதரவாக இல்லாவிட்டால் நம்மால் நடிக்க முடியாது. தனுஷ் மிகவும் ஆதரவாக இருந்தார். மிகவும் அன்பானவரும் கூட.
செல்வராகவன் சாரின் படங்களை இதுவரை நான் பார்த்தது இல்லை. ஆனால் நானே வருவேன் பட ஷூட்டிங்கின்போது அவரின் ரசிகையாகிவிட்டேன்.
தனுஷ் எப்படிப்பட்டவர்?: உண்மையை சொன்ன நானே வருவேன் ஹீரோயின்
முன்னதாக கதை சொல்ல அவர் என்னை அழைத்தார். அவருக்கு இருக்கும் தெளிவை பார்த்து வியப்பாக இருந்தது. அவரிடம் இருந்து படம் இயக்குவது உள்பட நிறைய கற்றுக் கொண்டேன்.
நானே வருவேன் படத்தில் என் கதாபாத்திரம் பற்றி சொல்லக் கூடாது. ஆனால் அது என் நிஜ கேரக்டர் போன்றே இருக்கும். நான் ஸ்வீடனை சேர்ந்தவள் என்றாலும் இந்திய பெண் தான்.
நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றே உணர்கிறேன் என்றார்.