பொதுவாக சுவாரஸ்யமான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் ஆக்கிரமித்திடும். அந்த வகையில் அண்மையில் கடலை வியாபாரி பாடிய ‘கச்சா பாதம்’ பாடல் நாடு முழுவதும் வைரலானது. பாடலோடு சேர்ந்தே அப்பாடலைப் பாடிய பூபன் பத்யாகரும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அந்த வரிசையில் எலுமிச்சை சோடா வியாபாரி வியாபாரத்தின் போது பாடும் ‘ஜிங்கில்’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் வாடிக்கையாளர்களைக் கவரும்படி வெயில் காலத்தில் குளிர்பானத்தால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில் எலுமிச்சை சோடா தாயாரிக்கும் செயல்முறையை சொல்லிக்கொண்டே பாடல் பாடும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் அவர் யார் எந்த ஊர் என்றெல்லாம் தகவல்கள் அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த பதிவிற்கு சமூக வலைதள பயனர்கள் பதிவிடும் கமென்ட்டுகள் அதற்கு இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. அதில் ஒருவர் ‘உங்கள் உழைப்பைப் பாராட்டுகிறேன்’ என்றும் ‘இவர் ‘கச்சா பாதம்’ பாடகரின் மகன்’ என்றும் பல்வேறு கமென்ட்டுகள் பதிவிடப்பட்டுள்ளது. இன்றைய காலங்களில் எளிமையான வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் செய்யும் முயற்சிகள் பாராட்டுக்குரியதே.