மணல் கொள்ளை முறைகேடு வழக்கில் நேரில் விளக்கம் அளிக்க பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்கள் நடத்திவந்த மணல் அள்ளும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சன்னியின் உறவினர் புபிந்தர் சிங் ஹனி 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மேலும், அப்போதைய முதலமைச்சராக இருந்த சன்னி நேரில் விளக்கம் அளிக்க கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அப்போது அவர் ஆஜாராகாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்மனை அமலாக்கத்துறையினர் அனுப்பியுள்ளனர். சன்னி மற்றும் அவரது உறவினர்கள் மீதான முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க கோரி ஆளுநரை சந்தித்து தேர்தலுக்கு முன்பே ஆம்ஆத்மி கட்சியினர் கடிதம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM