ஏலூர்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அக்கிரெட்டிகுடம் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம், மோனோமெதில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
