இந்தியாவின் மிக முக்கியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஆயில் இந்தியா மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது.
இந்தச் சைபர் தாக்குதலில் ஆயில் இந்தியாவின் பல சர்வர்கள் பாதிக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் அசாம் திப்ருகார் மாவட்டத்தில் இருக்கும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகள் மொத்தமாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயில் இந்தியாவிடம் சுமார் 57 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கேட்டு உள்ளனர்.
இந்தியன் ஆயில் திடீர் முடிவு.. ரஷ்யா ஷாக்.. என்ன நடக்குது..?
சைபர் தாக்குதல்
இந்தியாவில் கடந்த சில வருடத்தில் நடந்த பல்வேறு சைபர் தாக்குதலில் ஆயில் இந்தியா மீதானது மிகவும் பெரியதாகவும், கடுமையானதாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆயில் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் திரிதிவ் ஹசாரிகா கூறுகையில், “இது ஒரு ரேன்சம் வைரஸ், இது மிகவும் கடுமையான மற்றும் வலுவான வைரஸ் ஆக உள்ளது. இந்தச் சைபர் தாக்குதல் மூலம் சில சேவைகள் பாதித்துள்ளது, முழுமையாக மீட்க பல மணிநேரம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
திரிதிவ் ஹசாரிகா
இந்தச் சைபர் தாக்குதலில் இருந்து மீண்டு வர ஆயில் இந்தியா அதிகாரிகள் மட்டும் அல்லாமல் வெளிப்புற நிபுணர்களின் உதவியையும் பெற்று வருகிறோம் என்று திரிதிவ் ஹசாரிகா கூறியுள்ளது. இதுவரையில் எவ்விதமான தகவல் திருட்டும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
புகார்
ஆயில் இந்திய இந்தச் சைபர் தாக்குதல் குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் 2000 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
196 பிட்காயின்
மேலும் அசாம், திப்ருகர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஸ்வேதாங்க் மிஸ்ரா கூறுகையில், ஹேக்கர்கள் 196 பிட்காயின்களை மீட்கும் தொகையாகக் கேட்டுள்ளனர், இது தோராயமாக 60 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வர்கள் பாதிப்பு
தற்போது ஆயில் இந்தியா நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட சர்வர்களை இணைப்பைத் தனியாக மற்ற சர்வர்களைப் பாதுகாப்புப்படுத்தியுள்ளதாகவும், ஆன்லைன் சர்வர்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாகலும், ஆப்லைன் சர்வரகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
Oil India under cyberattack; Hackers demands nearly 60 Crore Ransom as 196 bitcoin
Oil India under cyberattack; Hackers demand nearly 60 Crore Ransom as 196 bitcoin ஆயில் இந்தியா மீது சைபர் அட்டாக்.. 60 கோடி கேட்டும் ஹேக்கர்கள்..!