சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
இன்று மாலை ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கபட உள்ள நிலையில் அமைச்சர்கள் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வரிடம் உறுதி அளித்த பிறகும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை என்றும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாரதியார் சிலை திறப்பு விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளார். பேரவை மக்களின் மாண்பை ஆளுநர் குலைப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.