தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிப்பதாகவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் இருமுறை மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும், நேரில் வற்புறுத்தியும் ஆளுநர் அனுப்பவில்லை.
நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது குறித்த உறுதியான பதில் பெறப்படாத நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது.
ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமூகமாகவும் இருக்கும் என நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப்படி கடமை ஆற்றினால் மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.