உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்பு உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடையை விதித்த நிலையில், புதின் அரசு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுத் தனது நடப்பு நாடுகள் உடனான வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பதாக அறிவித்தது.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் இருந்து ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அதன் சமீபத்திய கச்சா எண்ணெய் டெண்டரில், ரஷ்ய கச்சா எண்ணெய் (ரஷ்ய யூரல்கள்) உட்படப் பல அதீத சல்பர் கொண்ட கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்தில் இருந்து விலக்கியுள்ளது என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியன் ஆயில் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மறுத்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
முக்கியக் கச்சா எண்ணெய்
இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் தனது சந்தை பங்கேற்பாளர்களுக்கு, தாஸ், யூஜின் தீவு, தண்டர் ஹார்ஸ் மற்றும் யூரல்ஸ் கச்சா எண்ணெய் ஆகியவை செவ்வாய்க்கிழமை முடிவடையும் அதன் எண்ணெய் டெண்டரின் கீழ் சேர்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
சென்னை பெட்ரோலியம்
இந்தியன் ஆயில் தனக்காகவும் அதன் கிளை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாகவும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. சென்னை பெட்ரோலியம் ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அதீத சல்பர் கொண்ட கச்சா எண்ணெய்-ஐ பெற்றுள்ள நிலையில் தற்போது சல்பர் இல்லாத எண்ணெய்-ஐ வாங்க முயற்சி செய்கிறது.
இரண்டு ஆர்டர்
சுத்திகரிப்பு நிறுவனம் இந்த வாரம் இரண்டு டெண்டர்களை நடத்துகிறது, மே-ஜூன் லோடிங்கிற்குத் தனித்தனியாகச் சல்பர் கொண்ட கச்சா எண்ணெய் மற்றும் சல்பர் இல்லாத கச்சா எண்ணெய்யை ஆர்டர் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு ஆர்டர்கலும் மே-ஜூன் மாதத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய்
ரஷ்யா அளிக்கும் கச்சா எண்ணெய் வாங்கினால் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வாய்ப்பு உள்ளது, இல்லையெனில் கஷ்டம் தான். சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் சில இடங்களில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்தச் சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர துவங்கும். இதனால் இந்தியாவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் அவசியம்.
Indian Oil removes Russian Urals from latest tender
Indian Oil removes Russian Urals from latest tender இந்தியன் ஆயில் திடீர் முடிவு.. ரஷ்யா ஷாக்.. என்ன நடக்குது..?